top of page
uts%20building_edited.jpg

எங்களைப் பற்றி  

உலகத் தமிழ்ச் சங்க வரலாறு

          ⦿ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் “உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் உலகத்தமிழ்ச் சங்கம் இயங்கும்” என 1981 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நடைபெற்ற 5வது உலகத்தமிழ் மாநாட்டில் அறிவித்தார்.

          ⦿ மதுரையிலுள்ள தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலம் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென ஒதுக்கப்பட்டது.

            ⦿ 1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள் உலகத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

          ⦿ இசையரங்கு, ஆடலரங்கு, பாட்டரங்கம், வில்லிசை, இன்னிசை, கருத்தரங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

  ⦿ “உலகத்தமிழ்ச்சங்கம் மதுரையில் புதுப்பொலிவோடும் சிறப்போடும் செயற்படும்” – என 2012ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார். (தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை (தவ2.2), (அரசாணை (நிலை)எண்.234 நாள்:12.07.2012)

invitation-195x300.jpg
Untitled-1.jpg
bottom of page